திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுபிகாரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் ஜூன் 4-ம் தேதி மர்மமான முறையில் எரிந்து இறந்து கிடந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 4 மாதங்களாக சுமார் 120 பேரிடம் விசாரணை நடத்தி ஜெயக்குமாரின் மர்ம மரணம் கொலையா? தற்கொலையா? என்று தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்ட திமுக வர்த்தகர் அணி அமைப்பாளர் சுபிகரிடம் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வெட்டிகாமரைப் பகுதியைச் சேர்ந்த சுபிகர் என்பவர் உயிரிழந்த ஜெயக்குமாரின் நெருங்கிய உறவினர் என்பதுடன் அவருடன் இணைந்து பல தொழில்களை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box