WhatsApp Channel
இந்தியாவைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இந்தியாவின் இஸ்ரோவுடன் இணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நாசா நிர்வாகி பில் நெல்சன் இன்று இந்தியா வந்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நான் இந்தியாவில் இறங்கியுள்ளேன். இஸ்ரோவுடன் நாசாவின் உறவை மேம்படுத்த ஒரு வார சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளுக்கு நான் தயாராக இருக்கிறேன்.
விண்வெளி துறையில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்த பயணம் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து அவர் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளார். இந்த பயணத்தின் போது இரு நாட்டு விண்வெளி அதிகாரிகளையும் அவர் சந்திக்கிறார்.
இந்த சந்திப்பில், பெரிய அளவிலான கண்டுபிடிப்புகள் மற்றும் புவி அறிவியல் உள்ளிட்ட ஆராய்ச்சி தொடர்பான துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து அவர் பேசுவார் என்று நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post