WhatsApp Channel
பெண்களின் கருக்கலைப்பு உரிமை தொடர்பான மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பெண்களின் கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களுக்கு வழிவகுத்தது. அப்போது பிரான்சில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகள் ஏற்படுத்தப்படும் என்று அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உறுதியளித்தார்.
அதன்படி, பெண்களின் கருக்கலைப்பு உரிமை தொடர்பான மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மசோதா செனட் சபைக்கு அனுப்பப்படும். பெரும்பான்மை இருந்தால் அது சட்டமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post