“ஒரு வரியில் ‘சாரி’ சொல்லுவதே நீதியா?” – நயினார் நாகேந்திரன் ஸ்டாலினிடம் கேள்வி
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், காவல்துறையினரால் உயிரிழந்த அஜித்குமாரின் தாயிடம் ‘சாரி’ என ஒரே வரியில் கூறிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் நாகேந்திரன் கூறியதாவது:
“காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாயிடம் ‘சாரி மா’ என நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளி செய்திகளில் காணப்பட்டது. ஒரு அப்பாவி இளைஞனை கொன்றுவிட்டு, ஒரு வரியில் மன்னிப்பு கேட்பது எந்த நீதிக்குட்பட்ட செயல்?
இதைத் தவிர்க்க நடவடிக்கை எடுப்பதே, காவல் துறையை நேரடியாக கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சரின் அடிப்படை பொறுப்பு அல்லவா?
சரி, உண்மையிலேயே மனதளவில் வருந்தி முதலமைச்சர் மன்னிப்பு கேட்டிருக்கிறார் எனப் பெருந்தன்மையுடன் எண்ணினால் கூட, ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காவல் நிலையங்களிலும் காவல்துறையினரின் பாதுகாப்பிலிருந்தபோது உயிரிழந்தவர்களின் பட்டியல் இதோ:
- பிரபாகரன் (45) – நாமக்கல்
- சுலைமான் (44) – திருநெல்வேலி
- தாடிவீரன் (38) – திருநெல்வேலி
- விக்னேஷ் (25) – சென்னை
- தங்கமணி (48) – திருவண்ணாமலை
- அப்பு @ ராஜசேகர் (31) – சென்னை
- சின்னதுரை (53) – புதுக்கோட்டை
- தங்கபாண்டி (33) – விருதுநகர்
- முருகானந்தம் (38) – அரியலூர்
- ஆகாஷ் (21) – சென்னை
- கோகுல்ஸ்ரீ (17) – செங்கல்பட்டு
- தங்கசாமி (26) – தென்காசி
- கார்த்தி (30) – மதுரை
- ராஜா (42) – விழுப்புரம்
- சாந்தகுமார் (35) – திருவள்ளூர்
- ஜெயகுமார் (60) – விருதுநகர்
- அர்புதராஜ் (31) – விழுப்புரம்
- பாஸ்கர் (39) – கடலூர்
- பாலகுமார் (26) – ராமநாதபுரம்
- திராவிடமணி (40) – திருச்சி
- விக்னேஷ்வரன் (36) – புதுக்கோட்டை
- சங்கர் (36) – கரூர்
- செந்தில் (28) – தருமபுரி
இந்த 23 பேரின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்கும் புகைப்படங்களும் வீடியோவுமாய் எப்போது வெளியிடப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.