திருவானைக்காவல் கோயிலில் தியானத்தில் ஈடுபட்டார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

திருச்சியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் – அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு விஜயம் செய்தார்.

கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர், அம்மன் சந்நிதி அருகே அமர்ந்து சில நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டார். அதன்பின் கோயிலுக்கு வெளியே இருந்த பசுவிற்கு கீரை அளித்து வழிபாடுகளை நிறைவேற்றினார்.

பின்னர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்தார்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் அவர் எழுதியிருந்த பதிவில்,

“அகிலத்தை அருளால் காத்து நிற்கும் அகிலாண்டேஸ்வரி கல்வி வழங்கும் தெய்வமாக விளங்குகிறார். மக்கள் அனைவரும் நலனுடன் வாழ இறைவன், அம்பாள் துணை நிற்க வேண்டும்.

மேலும், 108 திவ்யதேசங்களில் முதலிடத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், ஏழு லோகங்களைச் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. மக்கள் எல்லோரும் வளமும் சந்தோஷமும் பெற்று வாழ இறைவன் ரங்கநாதர் அருள் புரிவார்” என குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments Box