பிஹார் கூட்டத்தில் மோடியின் தாயார் குறித்து அவதூறு – தமிழக பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்

பிஹார் மாநிலம் தர்பங்காவில் நடந்த வாக்காளர் அதிகார யாத்திரை கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து அடையாளம் தெரியாத நபர் அவதூறாக பேசிய சம்பவம் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையொட்டி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே, தமிழக பாஜக துணைத் தலைவர் கரு. நாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியையும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் பாஜகவினர் கண்டித்தனர்.

மேலும், ராகுல் காந்தி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால், பல பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

Facebook Comments Box