அமித் ஷா, நிர்மலா சீதாராமனிடம் செங்கோட்டையன் பேச்சு விவரம்

டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தபோது செங்கோட்டையன் தெரிவித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

செங்கோட்டையன், டெல்லி பயணம் முடிந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியது:

“நேற்று ஹரித்வாருக்கு செல்ல போகிறேன் என்று கூறி புறப்பட்டேன். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க அனுமதி கிடைத்தது. அதன்பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து, தற்போதைய அரசியல் சூழல் பற்றிய கருத்துகளை பகிர்ந்துகொண்டோம். எல்லோரும் ஒன்றிணைந்து இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதே முக்கியம் என எடுத்துரைத்தேன்.

இதற்கிடையில் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமை உள்ளது. இதை வரவேற்கிறேன். உள்துறை அமைச்சரை சந்திக்கும் போது ரயில்வே அமைச்சர் வருகை தந்தார். அந்த சமயத்தில் ஈரோட்டிலிருந்து புறப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் முதலில் 10 மணிக்கு செல்ல வேண்டியிருந்தது; தற்போது முன்கூட்டியே புறப்படுவதால் சிரமம் ஏற்படுகிறது. இதற்கான பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

நான் மக்களுக்கு சேவை செய்வதிலும், இயக்கத்தை வலுப்படுத்துவதிலும் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்கும் முயற்சியை 10 நாளுக்குள் தொடங்க வேண்டும் என பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு செங்கோட்டையன் அறிவுறுத்தியிருந்தார். இதன்படி, அவரிடம் இருந்த அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிகள் மற்றும் கோபி, நம்பியூர் ஆகியோரின் சில நிர்வாக பதவிகளும் பழனிசாமி அகற்றியுள்ளார்.

இதனை தொடர்ந்து செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் ஈரோடு கோபியில் அவரது இல்லத்தில் வந்து ஆதரவு தெரிவித்தனர். அதற்குப் பிறகு செங்கோட்டையன் கோபி இருந்து கோவை வந்தார். பின்னர் கோவை, பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார். கடந்த இரவில் திடீர் சந்திப்பாக அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.

Facebook Comments Box