WhatsApp Channel
பாஜக ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத் நகரின் பெயர் பாக்யங்கர் என மாற்றப்படும் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஹைதராபாத் நகரின் பெயர் ‘பாக்யநகர்’ என மாற்றப்படும் என்று மத்திய அமைச்சரும், தெலுங்கானா பாஜக தலைவருமான கிஷன் ரெட்டி திங்கள்கிழமை தெரிவித்தார்.
மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா போன்ற நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதாக கிஷன் ரெட்டி தெரிவித்தார். மேலும் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“ஹைதர் யார் என்று கேட்கிறேன். ஹைதர் என்ற பெயர் தேவையா? ஹைதர் எங்கிருந்து வந்தார்? யாருக்காக ஹைதர் வேண்டும் என்று கேட்கிறேன். பாஜக ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத் பெயரை நீக்கிவிட்டு பாக்யநகர் என்று மாற்றுவோம்” கூறினார்.
ஏன் பெயரை மாற்றக் கூடாது. மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என்று பாஜக மாற்றவில்லை, திமுகதான் மாற்றியது
மெட்ராஸை சென்னை என்றும், பாம்பேயை மும்பை என்றும், கல்கத்தாவை கொல்கத்தா என்றும் மாற்றினார்கள். மேலும் ஹைதராபாத் பெயரை பாக்யங்கர் என்று மாற்றுவதில் என்ன தவறு.
“பெயரை மாற்றுவது குறித்து அறிவாளிகளின் ஆலோசனையை பாஜக ஏற்றுக்கொள்ளும், பாக்யங்கர் என்றால் அதிருஷ்ட நகரம் என்று பொருள்” என்று அவர் கூறினார்.
Discussion about this post