பொருளாதார அறிக்கையின்படி, 2025 நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 6.5% முதல் 7% ஆக இருக்கும்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பொருளாதார நிலை குறித்த விளக்க அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார்.
கடந்த நிதியாண்டில் எடுக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து 476 பக்க அறிக்கை விளக்குகிறது.
சர்வதேச பிரச்சனைகள் மற்றும் பருவமழை மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும் சில்லறை பணவீக்கம் நன்கு நிர்வகிக்கப்படுகிறது.
2023ல் 6.7 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம், 2024ம் நிதியாண்டில் 5.4 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் பொருளாதார அறிக்கை கூறியுள்ளது.
சில உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகரித்தாலும், ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருப்பதாக பொருளாதார அறிக்கை கூறியுள்ளது.
Facebook Comments Box