MSMEகளுக்கான கடன் திட்டத்தை எளிமையாக்க கடன் உத்தரவாத திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பட்ஜெட் உரையின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பட்ஜெட்டில், MSMEகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. MSME உரிமையாளர்கள் கடன் சுமையைத் தவிர்க்க கடன் உத்தரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், MSME விண்ணப்பதாரர்களுக்கு தலா ரூ.100 கோடி வரை சுயநிதி கடன் உத்தரவாதம் வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்தார்.
இதேபோல் முத்ரா திட்டங்களுக்கான உச்ச வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என்றார்.
Discussion about this post