மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தவிருந்ததாக கூறிய கருத்துக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சவால் விடுத்துள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் சக்கர வியூகம் குறித்து கூறிய கருத்தைத் தொடர்ந்து, தனது வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்த தயாராக இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
இது குறித்து அமலாக்கத் துறையிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்திக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், தன்னை தொடர்பு கொண்ட அதிகாரியின் பெயரை வெளியிடுமாறு சவால் விடுத்தார்.