வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,500க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து 4-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிலச்சரிவில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
Facebook Comments Box