WhatsApp Channel
ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார்.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றி அமைக்கிறது. இந்நிலையில், வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் (ரெப்போ வட்டி) மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவீதமாக இருக்கும். வீடு மற்றும் கார் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. பண்டிகைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடரும். பணவீக்கத்தை 4%க்குள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 7.3 சதவீதமாக இருந்த மொத்த பணவீக்கம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 4.6 சதவீதமாக குறைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் 4வது முறையாக ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post