WhatsApp Channel
வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு, எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்கலாம் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதன் பிறகு ஒரு மாதத்தில் இரண்டு முறை இந்த நிறுவனங்கள் எரிவாயு விலையை தீர்மானிக்கின்றன. இதனால் வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.12.50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னையில் நேற்று வரை வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ. 1924 ரூபாய் 50 பைசாவாக விற்கப்பட்டது, ஆனால் இன்று முதல் 1,937 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் காரணமாக ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
சென்னையில் வீட்டு சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.918.50 பைசாவாக உள்ளது.
Discussion about this post