WhatsApp Channel
இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 ஆகும்.
இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி 22ம் தேதி வெளியிடப்பட்டது.அதன்படி தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அதன்பின்னர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்ய விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் சரிபார்க்கப்பட்டு புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
கடந்த வாரம், தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901. அதில் ஆண்கள் 3 கோடியே 6 லட்சத்து 2 ஆயிரத்து 367; பெண்கள் 3 கோடியே 17 லட்சத்து 16 ஆயிரத்து 69; மூன்றாம் பாலினம் 8,465. தொடர்ந்து விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.
தற்போது இந்த வாக்காளர் பட்டியல் (28ம் தேதி) இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.
தற்போது இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925. அதில் ஆண்கள் 3 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரத்து 793; பெண்கள் 3 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 665; மூன்றாம் பாலினம் 8,467.
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 20 லட்சத்து 85 ஆயிரத்து 991 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 10 லட்சத்து 24 ஆயிரத்து 149 பேர் ஆண்கள்; பெண்கள் 10 லட்சத்து 61 ஆயிரத்து 457; மூன்றாம் பாலினத்தவர் 385. வடசென்னை தொகுதியில் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 96 ஆயிரத்து 224; ஆண்கள் 7 லட்சத்து 30 ஆயிரத்து 395; பெண்கள் 7 லட்சத்து 65 ஆயிரத்து 286; மூன்றாம் பாலினம் 543.
தென் சென்னை தொகுதியில் மொத்தம் 20 லட்சத்து 23 ஆயிரத்து 133; ஆண்கள் 10 லட்சத்து 851; பெண்கள் 10 லட்சத்து 21 ஆயிரத்து 818; மூன்றாம் பாலினத்தவர் 464. மத்தியசென்னை தொகுதி மொத்தம் 13 லட்சத்து 50 ஆயிரத்து 161; ஆண்கள் 6 லட்சத்து 67 ஆயிரத்து 465; பெண்கள் 6 லட்சத்து 82 ஆயிரத்து 241; மூன்றாம் பாலினம் 455.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மொத்தம் 23 லட்சத்து 82 ஆயிரத்து 119; ஆண்கள் 11 லட்சத்து 80 ஆயிரத்து 263; பெண்கள் 12 லட்சத்து 1 ஆயிரத்து 427; மூன்றாம் பாலினம் 429.
காஞ்சிபுரம் தொகுதியில் மொத்தம் 17 லட்சத்து 48 ஆயிரத்து 866; ஆண்கள் 8 லட்சத்து 53 ஆயிரத்து 456; பெண்கள் 8 லட்சத்து 95 ஆயிரத்து 107; மூன்றாம் பாலினம் 303.
இந்த வாக்காளர் பட்டியலின்படி, அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதியாக ஸ்ரீபெரும்புதூர் உள்ளது. குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் தொகுதியில் 13 லட்சத்து 45 ஆயிரத்து 120 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தகவலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று தெரிவித்தார்.
Discussion about this post