WhatsApp Channel
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை டிக்கெட் வழங்கப்படுகிறது
சென்னையை அடுத்த வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ள நிலையில், தென் மாவட்டங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று (1ம் தேதி) முதல் மாதாந்திர தள்ளுபடி டிக்கெட் விற்பனை மையம் செயல்படும் என்றும், மாதந்தோறும் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை டிக்கெட் வழங்கப்படும் என மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் அறிவித்துள்ளார்.
இன்று முதல் ரூ.1,000 விருப்ப பயண அட்டை, மாதாந்திர பயணச்சலுகை அட்டை, 50% மாணவர் சலுகை பயண அட்டை, மூத்த குடிமக்களுக்கு இலவச பயண அட்டையுடன் 10 இலக்க டோக்கன் வழங்கப்படும் என்றார்.
Discussion about this post