WhatsApp Channel
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தின் டிரைலர் வரும் 5ஆம் தேதி வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 19ம் தேதி ‘லியோ’ படம் வெளியாகிறது. சமீபத்தில், படத்தின் இரண்டாவது பாடலான ‘படஸ்’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலானது.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் ‘லியோ’ படத்தின் டிரைலர் வரும் 5ம் தேதி வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்தின் டிரைலரின் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ஆனால், டிரெய்லர் எப்போது வெளியாகும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
Discussion about this post