WhatsApp Channel
தமிழகம் வரும் பிரதமர் மோடி முன்னிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி பாஜகவில் இணைய உள்ளார்.
வரும் 25ம் தேதி பல்லடத்தில் நடைபெறும் பிரமாண்ட பா.ஜ.க கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பிரதமர் மோடியின் வருகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விளவங்கோடு தொகுதியில் 3 முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பாஜகவில் சேரப் போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக தமிழக காங்கிரஸ் கட்சி தனக்கு உரிய மரியாதை அளிக்காததால் விஜயதாரணி மனமுடைந்து இருந்தார். இந்நிலையில், பா.ஜ.கவில் சேர, பிரதமர் மோடி, இம்மாதம், தமிழகம் வருகிறார் என்ற தகவலால், காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Discussion about this post