WhatsApp Channel
இன்று 71வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
ஸ்டாலின் பிறந்தநாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினார். கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்ற அவர், கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின், அன்னை தயாளு அம்மாளை வாழ்த்தினார்.
அதன்பிறகு, சிஐடி காலனியில் உள்ள கருணாநிதி இல்லத்துக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து, ராசாத்தி அம்மாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் சென்னை அண்ணா கழகத்துக்குச் சென்ற செயல்தலைவர் ஸ்டாலின், கலைஞர் அரங்கில் திமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சி தொண்டர்களிடம் வாழ்த்து பெற்றார்.
மோடி வாழ்த்து: இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X சமூக வலைதள பக்கத்தில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலை வாழ்த்து: ஸ்டாலினின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில், “தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நலமுடனும், நீண்ட ஆயுளுடனும் மக்கள் பணி தொடர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
விஜய் வாழ்த்து: முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post