WhatsApp Channel
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 100 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சூ நகரில் நடந்து வருகிறது. ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று 15வது நாளாக நடந்து வருகிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 100 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
ஆசிய விளையாட்டுப் பதக்கப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகளின் விவரம்:-
சீனா: 188 தங்கம், 106 வெள்ளி, 64 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் – 358
ஜப்பான்: 47 தங்கம், 58 வெள்ளி, 65 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் – 170
தென் கொரியா: 36 தங்கம், 50 வெள்ளி, 85 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் – 171
இந்தியா: 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் – 100
உஸ்பெகிஸ்தான்: 20 தங்கம், 18 வெள்ளி, 26 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் – 64
சீன தைபே: 18 தங்கம், 17 வெள்ளி, 26 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் – 61
தாய்லாந்து: 12 தங்கம், 14 வெள்ளி, 30 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் – 56
வடகொரியா: 11 தங்கம், 18 வெள்ளி, 10 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் – 39
பஹ்ரைன்: 10 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் – 18
கஜகஸ்தான்: 9 தங்கம், 18 வெள்ளி, 41 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் – 68
Discussion about this post