WhatsApp Channel
10 அணிகள் பங்கேற்கும் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது.
10 அணிகள் பங்கேற்கும் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்தத் தொடரில் இதுவரை நடைபெற்ற லீக் ஆட்டங்களின் முடிவில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்துள்ளன.
இந்நிலையில், இந்தத் தொடரின் மிக முக்கியமான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் தர்மசாலாவில் மோதுகின்றன. நியூசிலாந்து 5 ஆட்டங்களில் 4 வெற்றி, 1 தோல்வியுடன் 8 புள்ளிகளையும், ஆஸ்திரேலியா 5 ஆட்டங்களில் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகளையும் பெற்றுள்ளன.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகம் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
Discussion about this post