WhatsApp Channel
FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடர் உலகில் அதிகம் பார்க்கப்படும் விளையாட்டுகளில் ஒன்றாகும்.
இதற்கிடையில், 23வது உலக கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் 2026ல் நடைபெறவுள்ளது.2030 போட்டியை மொராக்கோ, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகள் கூட்டாக நடத்துகின்றன.
இதன் விளைவாக, 2034 இல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பைப் பெற ஆஸ்திரேலியா மற்றும் சவுதி அரேபியா ஆர்வம் காட்டின.
இந்நிலையில், போட்டிக்கான உரிமம் பெறும் முயற்சியில் இருந்து விலகுவதாக கால்பந்து கூட்டமைப்பு ஆஸ்திரேலியா நேற்று அறிவித்தது. இதன் மூலம் 2034ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை சவுதி அரேபியா நடத்துவது உறுதியாகியுள்ளது.
Discussion about this post