WhatsApp Channel
இன்றைய உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 34வது லீக் ஆட்டத்தில் இன்று உத்திரபிரதேச தலைநகர் லக்னோவில் ஆப்கானிஸ்தான் அணி நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் 6 ஆட்டங்களில் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. வங்கதேசம், இந்தியா, நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியடைந்த ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதியில் நீடிக்கிறது. மீதமுள்ள 3 லீக் ஆட்டங்களில் வெற்றி பெறும் அணி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறும்.
ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி 6 ஆட்டங்களில் 2 வெற்றிகள் (தென்னாப்பிரிக்கா, வங்கதேசத்துக்கு எதிராக) மற்றும் 4 தோல்விகளுடன் (பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) அரையிறுதி வாய்ப்பில் உறுதியாக உள்ளது.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் வீசப்பட்டது. டாஸ் வென்ற நெதர்லாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீசும்.
Discussion about this post