WhatsApp Channel
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மும்பையில் இன்று நடக்கிறது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றிக்காக ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் களமிறங்கும் என்பதால் இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. IST மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
Discussion about this post