புதுச்சேரியில் பாஜக நியமன எம்எல்ஏக்கள் ராஜினாமா – சட்டப்பேரவைத் தலைவர் விளக்கம்

புதுச்சேரியில் பாஜக நியமன எம்எல்ஏக்கள் ராஜினாமா – சட்டப்பேரவைத் தலைவர் விளக்கம்

புதுச்சேரியில் மூன்று பாஜக நியமன எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று (ஜூன் 28) மாலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால், பாஜக தேசிய தலைமையின் ஆலோசனைக்கு ஏற்ப ராமலிங்கம், அசோக்பாபு மற்றும் வெங்கடேசன் ஆகியோர் தங்களது நியமன எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களது ராஜினாமா கடிதம் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் துணைநிலை ஆளுநரிடம் அனுப்பப்பட்டு, ஏற்கப்பட்டிருக்கிறது” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: “அனைத்து அமைச்சர்களும் திறமையாக பணியாற்றி வருகின்றனர். தேர்தல் சமீபத்தில் சாய் ஜெ. சரவணன்குமார் கட்சிப் பணிகளில் ஈடுபட விரும்பியதால், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் மீது எந்தவித குற்றச்சாட்டும் இல்லை. பட்டியலினத்தைச் சேர்ந்தவர் அமைச்சராக இல்லாத நிலை முன்பும் இருந்திருக்கிறது.

இப்போது அந்த சமுதாயத்தினரிடமிருந்து ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படுவாரா என்பதை முதல்வர் முடிவு செய்வார். சரவணன்குமார் தனது விருப்பப்படி ராஜினாமா செய்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி தொடரும். மீண்டும் முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆட்சி அமையும்.

புதிய நியமன எம்எல்ஏக்களை தேர்வு செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசித்த பிறகு முடிவு செய்யப்படும். என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினருக்கு நியமன எம்எல்ஏ பதவிகள் வழங்கப்படுமா என்பது பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் இணைந்து தீர்மானிக்க வேண்டிய விஷயம்.

நான் சட்டப்பேரவைத் தலைவராக தொடர்வேன். தேசிய தலைமை கேட்டால் ராஜினாமா செய்ய தயார். பாஜக மாநில தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிப்பதற்கான முடிவை தேசிய தலைமை எடுக்கும். இது குறித்து என்னிடம் ஆலோசனை எதுவும் பெறப்படாது.

இனிவரும் நாட்களில் கட்சியில் முக்கியமான structural மாற்றங்கள் நிகழும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து 30 தொகுதிகளிலும் வெற்றி பெறும் நோக்கில் தேசிய ஜனநாயக கூட்டணி பல்வேறு நிலைப்பாடுகளையும் மாற்றங்களையும் மேற்கொள்கிறது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தேசிய தலைமையின் வழிகாட்டுதலின் பேரிலேயே அமையும்.

ராஜினாமா செய்தவர்களில் ஒருவர் பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முடிவும் தலைமைத் தளம் எடுக்கும். பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் ஜூன் 30ஆம் தேதி புதுச்சேரி வருகிறார். அவர் புதிய மாநில தலைவரை அறிவிப்பார். காலியாக உள்ள பதவிகள் ஜூலை 1ஆம் தேதிக்குள் நிரப்பப்படும். அதேபோல, புதிய சட்டங்கள் மற்றும் மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக ஜூலை மாதத்தில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும்” என அவர் தெரிவித்தார்.

Facebook Comments Box