திமுக இனி தமிழகத்திற்கு தேவையில்லை என்பதே எங்கள் கூட்டணியின் உறுதி” –  நயினார் நாகேந்திரன் கருத்து

“திமுக இனி தமிழகத்திற்கு தேவையில்லை என்பதே எங்கள் கூட்டணியின் உறுதி” – பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியில் 300-க்கும் அதிகமான பெண்கள் பாஜகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“திமுக இனி தமிழகத்தில் தேவையில்லை என்பது எங்கள் கூட்டணியின் நிலைபாடு. இந்த உண்மையை மக்கள் எதிர்வரும் காலங்களில் உறுதியாக பிரதிபலிப்பார்கள். திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை.

சமீபத்தில் டாக்டர் ராமதாஸும், செல்வப்பெருந்தகையும் சந்தித்ததைப் பற்றிப் பேச முடியாது. ஆனால் அந்த சந்திப்பு எதிர்கால அரசியல் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.”

மேலும் அவர் தொடர்ந்தே கூறியது:

“பாஜக தேசியத் தலைவர் தேர்வு முடிந்ததும், தேசிய மற்றும் மாநிலத் தலைவர் குழு அறிவிக்கப்படும்.

தமிழக ஆதிராவிட நலத்துறை பள்ளிகளில் கடந்த காலத்தில் 96,000 மாணவர்கள் பயின்றிருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 67,000-ஆக குறைந்துள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை இதற்கான முக்கிய காரணமாகும். இதுவே திராவிட மாடல் ஆட்சியின் விளைவாகும்.

கூட்டணியில் உள்ள அரசியல் நண்பர்களிடமும் மாற்றம் தேவை. அப்போதுதான் ஆட்சி மாற்றம் சாத்தியம். ஆனால், நான் எப்போதும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறேன்.

சமீபத்தில் சில ஆதீனங்கள் முதல்வரை சந்தித்தது பற்றி எனக்குத் தகவல் இல்லை. ஆனால் அவர்கள் தெரிவித்த கருத்துகளுடன் நான் ஒத்துழைக்க முடியாது.

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் போதைப்பொருள் பரவல் அதிகரித்து வருகிறது. போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற ஒரு கர்ப்பிணி தாக்கப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தால், அவர்கள்மீதே வழக்கு பதிவு செய்யப்படுகிறது.” எனக் கூறினார்.

Facebook Comments Box