மணல் மாஃபியாவுக்கு திமுக அரசு ஆதரவு தருகிறது – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நாமக்கல் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க முனைந்த பாலமேடு பெண் கிராம நிர்வாக அலுவலர் மீது மணல் கடத்தல் கும்பல் வீட்டுக்குள் புகுந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
நேர்மையாக பணியாற்றிய அதிகாரியை மட்டுமல்லாது, இனியும் தடுக்கும் முயற்சி மேற்கொண்டால் வண்டியில் ஏற்றி கொலைசெய்வோம் என மிரட்டியிருப்பதும் அதிர்ச்சி தருகிறது.
ஏற்கனவே, 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர், கரூரைச் சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் ஒருவர், ‘திமுக ஆட்சிக்கு வந்ததும் மணலை அள்ளிக் கொள்ளலாம்’ என்று வெளிப்படையாகச் சொன்னது நினைவிற்கு வருகிறது. அதனை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தொடர்ந்து மணல் கடத்தல் மாஃபியாக்களுக்கு திராவிட மாடல் அரசு உதவி செய்கிறது என்ற சந்தேகம் எழுகிறது,” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.