“நெற்றியில் திருநீறும், நெஞ்சத்தில் தேசப்பற்றும்” – ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நயினார் நாகேந்திரன்

திரை உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்தை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

சென்னையின் போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ரஜினியை சந்தித்த பிறகு, அந்த அனுபவத்தை நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் எழுதியதாவது:

“இந்தியாவின் உயரிய விருதான பத்ம விபூஷண், தாதா சாகிப் பால்கே விருது பெற்ற மகத்தான கலைஞர், ஆறிலிருந்து ஐம்பது வயது வரையிலான ரசிகர்களின் இதயத்தை வென்ற சூப்பர் ஸ்டார் அண்ணன் ரஜினிகாந்தை இன்று அவரின் இல்லத்தில் சந்தித்து உரையாடினேன். அவரின் வாழ்த்துகளைப் பெற்றதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.

Facebook Comments Box