கரூர் சம்பவம்: தமிழக அரசு மத்திய அமைச்சக கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் – எல்.முருகன்

கரூர் சம்பவம் தொடர்பில் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்ட விளக்கத்திற்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “கரூரில் நடந்த சம்பவம் மிகவும் வருத்தத்தக்கது. இத்தகைய நிகழ்வு நடக்கக் கூடாது. கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.”

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வரை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார். தேவையான அனைத்து உதவிகளும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியாக வழங்கப்படும் என உறுதி செய்தார்.

கரூர் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் விளக்கம் கோரியுள்ளது. தமிழக அரசு பதில் அளித்த பிறகு, அதைப் பற்றிய விரிவான விவரங்களை தெரிவிக்கலாம் என்றும் எல்.முருகன் தெரிவித்தார்.

Facebook Comments Box