WhatsApp Channel
இத்தாலியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்ததில் 21 பேர் உயிரிழந்தனர்.
வடக்கு இத்தாலியின் வெனிஸ் அருகே மேம்பாலத்தில் இருந்து முகாம் பகுதிக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் குறைந்தது 21 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்ததாக நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெனிஸ் நகருடன் பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ள மேஸ்ட்ரே மாவட்டத்தில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகே பேருந்து சாலையை விட்டு விலகிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
முன்னதாக, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர் மற்றும் நான்கு பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post