WhatsApp Channel
இன்று வெப்பம் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம், புதுவை, காரைக்காலில் இன்று 16ம் தேதி வறண்ட வானிலையே நிலவும் வாய்ப்புள்ளது.
ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கலாம். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் காலையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
இதனிடையே, 21.02.2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 32°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23°C ஆகவும் இருக்கும். குறிப்பாக, இன்று (பிப்ரவரி 16ஆம் தேதி) கடும் வெப்பம் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post