WhatsApp Channel
2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கான காலக்கெடுவை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கான காலக்கெடுவை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றவோ அல்லது வங்கிக் கணக்கில் திரும்பப் பெறவோ அக்டோபர் 7-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மே 10-ம் தேதி ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதன்படி, நாட்டில் புழக்கத்தில் இருந்த 93 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதாக ரிசர்வ் வங்கி கடந்த 1ம் தேதி அறிவித்தது.
Discussion about this post