WhatsApp Channel
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் தீபாவளி போனஸ் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், இது தொடர்பான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ‘சி’ பிரிவு மற்றும் அரசிதழ் அல்லாத ரேங்க் ‘பி’ பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
துணை ராணுவ வீரர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7000 போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எந்தெந்த ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ் கிடைக்கும் என்ற விரிவான அறிக்கையையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
Discussion about this post