WhatsApp Channel
அமெரிக்க வர்த்தகத் துறை 13 சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி தடை விதித்துள்ளது.
பல்வேறு காரணங்களுக்காக சில நாடுகள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஷ்யா மீது சீனா பல பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில் 13 சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்து அமெரிக்க வர்த்தக துறை நேற்று உத்தரவிட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள், ‘அமெரிக்காவின் தேசிய நலன் மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கு முரணான செயல்பாடுகளுக்காக’ தடை செய்யப்பட்டுள்ளன. கணினிகள் மற்றும் மின்னணு உபகரணங்களுக்கான சிப் தயாரிப்பாளரான மூர் த்ரெட் இன்டெலிஜென்ட் டெக்னாலஜி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post