WhatsApp Channel
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கான டாஸ் முடிவடைந்தது. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இரு அணிகளும் விளையாடிய 11 ஆட்டங்கள் வருமாறு:-
இந்தியா; யாஷ்வி ஜெய்ஸ்வால், ருதராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா
ஆஸ்திரேலியா; ஸ்டீவன் ஸ்மித், மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட் (கேப்டன்), சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, தன்வீர் சங்கா
Discussion about this post