WhatsApp Channel
‘ஜெலோ இந்தியா’ விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.
காலோ இந்தியா கேம்ஸ் என்பது இந்திய அளவில் அனைத்து மாநிலங்களும் பங்கேற்கும் போட்டியாகும். இந்த விளையாட்டுகளில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள்.
இந்தப் போட்டிகள் தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் நடைபெறும். போட்டிகள் இம்மாதம் 19ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. போட்டியின் நிறைவு விழா சென்னையில் நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். அப்போது, ‘ஜெலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுக்கிறார்.
Discussion about this post