WhatsApp Channel
7 லட்சம் வரையிலான தனிநபர் வருமானத்திற்கு வரி விலக்கு தொடரும்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திருப்பதி முர்மு உரையாற்றினார்.
இரண்டாவது நாளான இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் பல்வேறு சாதனைகள் மற்றும் செயல்பாடுகளை பட்டியலிட்டு புதிய திட்டங்களையும் அறிவித்தார்.
மேலும், இறக்குமதி வரி உள்ளிட்ட நேரடி மற்றும் மறைமுக வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தனிநபர் வருமானம் ரூ.7 லட்சம் வரையிலான வரிவிலக்கு தொடரும்.
நிதிப் பற்றாக்குறை வரும் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post