WhatsApp Channel
பாலிவுட் நடிகை பூனம் பாண்டே தனது 32வது வயதில் காலமானார்.
பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே (வயது 32). மாடலிங் துறையில் பிரபலமான இவர் நிஷா படத்தின் மூலம் அறிமுகமாகி இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
2011 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். அவர் தனது காதலன் சாம் பாம்பேயை 2020 இல் திருமணம் செய்து கொண்டார்.
இதற்கிடையில், பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பூனம் பாண்டே சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். நடிகை பூனம் பாண்டேவின் மரணம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Discussion about this post