WhatsApp Channel
பிரதமர் நரேந்திர மோடி வரும் 27ம் தேதி கேரளா வருகிறார்.
அடுத்த சில மாதங்களில் 2024 மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வளர்ச்சிப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக கேரள பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, காசர்கோட்டில் இருந்து மேற்கொள்ளும் நடைபயணம் பிப்ரவரி 27ம் தேதி திருவனந்தபுரத்தில் நிறைவடைகிறது.இதன் நிறைவு விழா சென்ட்ரல் ஸ்போர்ட்ஸ் ஹாலில் நடக்கிறது. அதில் பங்கேற்பதற்காக பிரதமர் கேரளா வருகிறார் என்றும் அவர் கூறினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் பங்கேற்கிறார். கடந்த மாதம் நடிகர் சுரேஷ் கோபியின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கேரளா வந்தார்.
Discussion about this post