WhatsApp Channel
4 பாகங்களாக வெளியான ராக்கியில் ‘அப்பல்லோ க்ரீட்’ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகர் கார்ல் வெதர்ஸ்.
ராக்கி 1976 ஆம் ஆண்டு ஹாலிவுட்டின் ஹீரோவாக சில்வெஸ்டர் ஸ்டலோன் நடித்த திரைப்படம். 4 பாகங்கள் கொண்ட இந்தப் படத்தில் ‘அப்பல்லோ க்ரீட்’ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் கார்ல் வெதர்ஸ் (வயது 76).
பக் டவுன், செமி டப், பிரிடேட்டர், லிட்டில் நிக்கி, தி காம்பேக்ஸ், டாய் ஸ்டோரி-4 என பல படங்களில் நடித்துள்ளார். 2019க்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த கார்ல் வெதர்ஸ், தொலைக்காட்சி தொடர்களில் மட்டுமே நடித்து வந்தார்.
இந்நிலையில் கார்ல் வெதர்ஸ் தனது 76வது வயதில் கடந்த 1ம் தேதி தூக்கத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.கார்ல் வெதர்ஸ் உடலுக்கு அவரது நண்பர்களும் ஹாலிவுட் நடிகர்களான சில்வெஸ்டர் ஸ்டோலன், மைக்கேல் பி ஜோர்டான் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
‘ஒரு சகாப்தம் கடந்துவிட்டது. கார்ல் வெதர்ஸை சந்தித்த பிறகு என் வாழ்க்கை மாறியது. அவரது நினைவுகள் நம்மை விட்டு நீங்காது’ என்று சில்வெஸ்டர் ஸ்டோலன் அரவணைப்புடன் குறிப்பிட்டார். கார்ல் வெதர்ஸ் 3 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து செய்து 2 மகன்களை பெற்றுள்ளார்.
Discussion about this post