WhatsApp Channel
இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி… உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாரத்….!?
உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சப்மான் கில் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். ரோகித் சர்மா 29 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவருடன் விளையாடிய சப்மன் கில் 65 பந்துகளில் 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக களம் இறங்கினார். அடுத்து வந்த விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 50வது சதத்தை அடித்த விராட் கோலி 117 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
ஷ்ரேயாஸ் ஐயர் தனது பங்கிற்கு 105 ஓட்டங்களையும், கே.எல். ராகுல் 39 ரன்கள் எடுக்க, இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் டிம் சவுத்தி 3 விக்கெட்டும், போல்ட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இதில் முதலில் விளையாடிய கான்வாய் மற்றும் ரவீந்திரன் தலா 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த வில்லியம்சன், மிட்செல் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர்.

வில்லியம்சன் அரைசதம் அடித்து 69வது ஓவரில் ஆட்டமிழந்தார். மிட்செல் சதம் அடித்து 134 ரன்களில் ஆட்டமிழந்தார். முன்னதாக லாதம் டக் அவுட் ஆனார். பிலிப்ஸ் 41 ரன்களிலும், சாப்மேன் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 45.2 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்திருந்தது. நியூலேண்ட் அணி 28 பந்துகளில் 92 ரன்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தது. மிட்செல் சான்ட்னரும், சவுத்தியும் களத்தில் இருந்தனர்.
இதில் மிட்செல் சான்ட்னர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து, சவுத்தியுடன் போல்ட் ஜோடி சேர்ந்தார். பெர்குசன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்நிலையில், நியூசிலாந்து அணி 48.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் எடுத்தது.
பந்துவீச்சைப் பொறுத்தவரை இந்திய வீரர் முகமது சமி சிறப்பாக பந்துவீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் அவர் எடுத்த 3வது 5 விக்கெட்டு இது. உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். மேலும், நடப்பு உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையும் சமிக்கு உண்டு.
இதன் மூலம் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்தியா 4வது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
Discussion about this post