WhatsApp Channel
அயோத்தி ராம ஜன்ம பூமியில் ஸ்ரீ ராமர் கோயில் மஹா கும்பாபிஷேகம்
பாரதத்தின் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை மீட்டெடுக்குக்கும் பல நூறு ஆண்டு அறப் போராட்டமும் பல்லாயிரம் இந்து ராம பக்தர்களின் உயிர்த்தியாகமும் இணைந்து அயோத்தியில் சனாதன வாழ்வியலின் நாயகன் ஸ்ரீ ராமனின் ஆலயம் வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி பகல் 11-மணிமுதல் 12.30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
அது சமயம் அன்றைய தினம் நம் பகுதியில் உள்ள ஒவ்வொரு இந்து ஆலயத்திலும் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் இணைந்து சிறப்பு வழிபாடுகள் நடத்திடவும் ஸ்ரீராம நாமம் ஜெபித்திடவும் வேண்டுகிறோம்.
மாலை 06:00 மணிக்கு வீடுகள் தோறும் கார்த்திகை தீபத்தைப் போன்று அகல்விளக்குகள் ஏற்றி பட்டாசுகள் வெடித்து கொண்டாடி தர்மத்தின் காவலன் ஸ்ரீராமபிரானின் பேரருள் பெற்றிட கேட்டுக் கொள்கிறோம்.
Discussion about this post