WhatsApp Channel
மேஷம் :
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும் . தெய்வ பக்தி அதிகரிக்கும் . ஆன்மீக பணிகளை செய்வதில் ஆர்வம் உண்டாகும் . ஆன்மீக பயணங்கள் செல்லவும் முயற்சிகள் மேற்கொள்ளும் நிலை உண்டாகும் . எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் . வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கும் நிலை ஏற்படும் . பண வரத்து திருப்திகரமாக இருக்கும் . மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய பயணங்கள் செல்ல நேரலாம் . உறவினர்கள் , நண்பர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும் .
ரிஷபம் :
இன்று முழுவதும் சந்திராஷ்டமம் என்பதால் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம் . புது முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது . தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும் . தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கி வேகம் பிடிக்கும் . குடும்ப செலவுகள் ஏற்படலாம் . நிதி உதவிகள் கிடைப்பதில் தாமத போக்கு காணப்படும் . வரவேண்டிய பாக்கி தொகை வசூல் தாமதமாக கிடைக்க கூடும் .
மிதுன ம் :
தொழில் , வியாபாரத்தில் பார்ட்னர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும் . எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை , தாமதம் நீங்கும் . எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது . வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும் . தேவையற்ற கவலை , அதனால் நடுக்கம் போன்றவை ஏற்பட்டு நீங்கும் . குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை விலகும் .
கடகம் :
தொழில் , வியாபாரத்தில் போட்டிகள் குறைவதுடன் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும் . உத்தியோகத்தில் இருந்த மறைமுக போட்டிகள் , எதிர்ப்புகள் நீங்கும் . எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும் . இதுவரை தடைபட்ட காரியங்களில் தடைகள் விலகி நல்ல பலன் கிடைக்கும் . கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும் . உறவினர்கள் , நண்பர்கள் மூலம் உதவிகளும் கிடைக்க கூடும் . ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும் .
சிம்மம் :
பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்த வேண்டி இருக்கும் . பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல் இருக்க கூடும் . அதே நேரத்தில் நல்ல பலனும் கிடைக்க கூடும் . முக்கிய விஷயங்களில் தெளிவான முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் உண்டாகலாம் . வெளியூர் பயணங்களின் போது தடைகள் உண்டாகலாம் என்பதால் கவனம் தேவை . வாகனங்களை ஓட்டி செல்லும் போது எச்சரிக்கை தேவை . பொருள் இழப்பு ஏற்படாமல் இருக்க கவனமாக செயல்படுவது நல்லது .
கன்னி :
எடுத்த காரியத்தை செய்துமுடிக்க கூடுதல் முயற்சி தேவைப்படும் . உறக்கம் பாதிக்கும் விதத்தில் வேலை சுமை அதிகரிக்க கூடும் . வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் , பயணங்களின் போதும் கவனம் தேவை . தேவையற்ற பயம் , கவலை போன்றவை ஏற்பட்டு நீங்கும் . எந்த வித காரணமும் இல்லாமல் தேவையற்ற அலைச்சல் இருக்க கூடும் . ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது .
துலா ம் :
தொழில் வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும் . முயற்சிகளில் வெற்றி உண்டாகும் . எந்த ஒரு வேலையையும் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள் . எதிர்பார்த்தபடி பண வரத்து இருக்கும் . மனதில் இருந்த பயம் நீங்கி தைரியம் உண்டாகும் . கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும் . எதிர்ப்புகள் விலகும் . சுப செய்திகள் வரக்கூடும் . உங்கள் செயல்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும் .
விருச்சிகம் :
தொழில் , வியாபராத்தில் நிதி நிலையை மேம்படுத்த எடுக்கும் முயற்சிகளில் தாமத போக்கு காணப்படும் . எதிர்பாராத செலவுகள் வரலாம் . குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகலாம் . வழக்கத்தைவிட அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும் . பணி நிமித்தமாக இருக்கும் இடத்தை விட்டு வேறு இடம் செல்ல நேரலாம் . வாடிக்கையாளர்கள் , பணியாளர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும் . எளிதாக செய்யும் வேலை கூட தாமதமாகலாம் .
தனுசு :
ருசியான உணவை உண்ண நேரலாம் . உத்தியோக ரீதியிலான பயணங்கள் செல்ல வேண்டி வரலாம் . சாதூரியமான பேச்சினால் காரிய அனுகூலம் ஏற்படும் . அடுத்தவர் செய்யும் காரியங்களால் உங்களுக்கு டென்ஷன் உண்டாகலாம் . பெரியோர் சந்திப்பு அவர்களால் நன்மை போன்றவை ஏற்படலாம் . குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும் . ஆடை , ஆபரணங்கள் வாங்கும் நிலை உண்டாகும் .
மகரம் :
பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை . வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது . உறவினர்கள் , நண்பர்கள் என்று யாரிடம் பேசினாலும் கவனமாக பேசுவது நன்மை தரும் . பண வரத்தில் தாமதம் ஏற்படலாம் . குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் மன வருத்தங்கள் வராமல் தவிர்க்கலாம் . எடுத்த காரியத்தை உடனடியாக செய்து முடிக்க முடியாமல் கால தாமதமாக கூடும் .
கும்பம் :
தொழில் , வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க கூடும் . எதிர்பார்த்த லாபம் கிடைக்க கூடும் . உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு , கூடுதல் பொறுப்புகள் கிடைப்பதுடன் அதனால் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உண்டாகலாம் . எதிர்பாலினத்தாரால் லாபம் கிடைக்க கூடும் . கல்வியில் மேன்மையான நிலை கிடைக்கும் . குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும் . வாழ்க்கை துணையால் நன்மைகள் உண்டாகும் .
மீனம் :
தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி காண எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் . எந்த ஒரு காரியத்திலும் சாதகமான பலனை எதிர்பார்க்கலாம் . முக்கிய நபர்களின் உதவிகள் கிடைக்க கூடும் . பிறர் பாராட்டும்படியான காரியங்களை செய்ய நேரலாம் . அதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்து உயரக்கூடும் . சொத்து தொடர்பான விவகாரங்களில் அனுகூலமான பலனை எதிர்பார்க்கலாம் .
Discussion about this post