பேரறிவாளன் 30 நாள் பரோலில் விடுவிப்பு… சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

0
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை புழல் சிறையிலிருந்த பேரறிவாளன் 30 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டார் பேரறிவாளன்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் கடந்த 29 ஆண்டு காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.
நீரழிவு நோய் காரணமாக பாதிக்கப்பட்ட அவர் கொரானா வைரஸ் தொற்று பரவல் உள்ளதால் மருத்துவ காரணங்களுக்காக 30 நாட்கள் சாதாரண விடுப்பில் பரோலில் விடுவிக்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார்.
அற்புதம்மாள் கோரிக்கையை அடுத்து மே 19ல் பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் விடுப்பு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். முதல்வரின் உத்தரவையடுத்து நிலையில் மருத்துவ பரிசோதனைகள் அறிக்கைகள் உரிய ஆணைகள் சமர்ப்பிக்கப்பட்டு இன்று பேரறிவாளன் பரோலில் விடுவிக்கபட்டார்.
பேரறிவாளனை துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் அழைத்து சென்றனர். இன்று முதல் 30 நாட்கள் சாதாரண விடுப்பில் அவர் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here