குமரியை தாக்கிய தொடர் கன மழை…. வரலாறு காணாத கன மழை….!

0
 

குமரி மாவட்டம் முழுவதும் இன்று மாலையில் இருந்து நான்கு மணிநேரம் விடாது கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுபெடன் மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவ்வப்போது விட்டு விட்டு இடி, மின்னலுடன் மழை பெய்தது.பின்னர் மாலை 2 மணிமுதல் கனமழை பெய்ய தொடங்கியது.இந்த மழை தொடர்ந்து நான்கு மணி நேரம் விடாது பேய் மழையாக பெய்தது.

இதனால் சாலைகளில் வெள்ளம் ஆறு போல் ஓடியது.ஏராளமான மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தது.பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.ஒருசில பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆறு ,குளங்கள் உடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.அணைகளில் இருந்து ஏற்கனவே தண்ணீர் வெளியேற்றப்படும் நிலையில், இந்த கனமழையால் விவசாய விளை நிலங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின.கன்னிப்பூ சாகுபடிக்காக தொடங்கப்பட்ட முதல் கட்ட பணிகள் அனைத்தும் வீணாகியது.இதனால் நெற்பயிர் விவசாயிகளுக்கு லட்ச கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் ஆயிரக்கணக்கான வாழைகள் மழை வெள்ளத்தால் சாய்த்து.மேலும் தோட்டப்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே கொரோனாவால் விலை ஏற்றம் இல்லாமமல் விவசாய பொருட்கள் இருந்து வந்த சூழலில் இது போன்ற தொடர்மழையால் மேலும் விவசாயிகள் நஷ்டம் ஏற்படும் அபாயத்தில் உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் கால் நூற்றாண்டுக்கு பிறகு இது போன்று தொடர் கன மழை பெய்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here