WhatsApp Channel
சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகண நாட்கள் ஆன்மீக ரீதியாக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியுமா? இந்த கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும் போன்ற பல கேள்விகள் மனதில் எழுகின்றன. இதைப் பற்றிய சில விஷயங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கிரகணம் என்றால் என்ன?
கிரகணம் என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வு. ஒரு பொருளில் இருந்து வரும் ஒளியை மற்றொரு பொருள் தடுக்கும் போது, அதிலிருந்து வரும் ஒளியின் அளவு குறைகிறது. விஞ்ஞானம் இதை கிரகணம் என்கிறது. இரண்டு வகையான கிரகணங்கள் உள்ளன. அவை சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகும். இந்த கிரகணங்கள் ஒவ்வொரு வருடமும் அவ்வப்போது நிகழும். இந்த ஆண்டு இந்த இரண்டு கிரகணங்களும் ஒரே மாதத்தில் ஏற்படுகின்றன. அதுவும் இந்த மாதத்தில்.
சூரிய கிரகணம் எப்போது?: அக்டோபர் 14 சனிக்கிழமையன்று சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும். சூரியனின் கதிர்களை சந்திரன் தடுக்கும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் பூமியின் சில பகுதிகளில் நிழல் இருக்கும். இது அக்டோபர் 14 ஆம் தேதி இரவு 11:29 மணிக்கு தொடங்கி இந்திய நேரப்படி இரவு 11:34 மணிக்கு முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிங் ஆஃப் ஃபயர் எக்லிப்ஸ்: அக்டோபர் 14ம் தேதி சூரிய கிரகணம் வளையம் போல் இருக்கும். அப்போது சந்திரன் சூரியனின் மையத்தை ஓரளவு மறைத்து நெருப்பு வளையம் போல் தெரிகிறது. இந்த அரிய நிகழ்வை வட மற்றும் தென் அமெரிக்காவில் மட்டுமே காண முடியும். இந்தியாவில் கிடைக்காது.
சந்திர கிரகணம் எப்போது?: இதேபோல் அக்டோபர் 28 மற்றும் 29-ம் தேதிகளில் சந்திரனுக்கும் சூரினுக்கும் இடையே பூமி வரும்போது பூமியின் நிழல் நிலவின் மீது விழுந்து சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சூரியன் – பூமி – சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும்போது இது நிகழ்கிறது.
இந்த சந்திர கிரகணம் அக்டோபர் 28, 2023 அன்று இரவு 11:31 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29, 2023 அன்று அதிகாலை 3:36 மணிக்கு முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post