WhatsApp Channel
சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது முதல் தினசரி மாத்திரைகள் சாப்பிடுவது வரை நமது கல்லீரல் பல வழிகளில் பாதிக்கப்படுகிறது.
நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு கல்லீரல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. கல்லீரல் நமது உடலின் உற்பத்தி மையம். அதனால், இதில் உள்ள நச்சுகள் நம்மை பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக்குகிறது. நமது கல்லீரலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் மோசமான உணவுகள் மற்றும் பானங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டியது அவசியம்.
சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது முதல் தினசரி மாத்திரைகள் சாப்பிடுவது வரை நமது கல்லீரல் பல வழிகளில் பாதிக்கப்படுகிறது. ஆரோக்கியமற்ற உணவுகளை தவறாமல் உட்கொள்வது கொழுப்பு கல்லீரல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இப்போது கல்லீரலைப் பாதிக்கும் சில உணவுகளைப் பார்ப்போம்.
அதிக சர்க்கரை: தினமும் அதிக சர்க்கரை உட்கொள்வது உங்கள் கல்லீரலை கடுமையாக சேதப்படுத்தும். உங்கள் தினசரி உணவில் சர்க்கரையை ஆரோக்கியமான உணவுகளுடன் மாற்றவும். நீங்கள் ஆரோக்கியமாக சாப்பிடும்போது, இனிப்பு மீது ஆசை வராது. தானியங்கள், இனிப்புகள், கேக்குகள் போன்ற அனைத்து சர்க்கரைப் பொருட்களையும் முற்றிலும் தவிர்க்கவும். இது கல்லீரலின் அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
மாவுச்சத்துள்ள உணவுகள்: உருளைக்கிழங்கு, வெள்ளை அரிசி, ரொட்டி போன்றவை எளிதில் ஜீரணமாகும், ஆனால் இந்த உணவுகள் நம் உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்கின்றன. இத்தகைய உணவுகள் மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கு முக்கிய காரணமாகும். எனவே இந்த மாவுச்சத்துள்ள உணவுகளை தினமும் குறைவாக உட்கொள்ளுங்கள்.
கொழுப்பு நிறைந்த உணவுகள்: பர்கர், பீட்சா, பொரித்த உணவுகளை விரும்பாதவர்கள் யாராவது உண்டா? ஆனால் இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகாது; இது கொழுப்பு கல்லீரலையும் ஏற்படுத்துகிறது. நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் நமது கல்லீரலுக்கு ஆரோக்கியமற்றவை. வறுத்த உணவுகளில் கொழுப்பு அதிகம். இந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது கல்லீரல் அழற்சி மற்றும் ஈரல் அழற்சிக்கு வழிவகுக்கும்.
உப்பு அதிகம் உள்ள உணவுகள்: உணவில் சுவை சேர்க்க உப்பு சேர்க்கப்படுகிறது. ஆனால் நாம் உணவில் அதிக உப்பைச் சேர்க்கும் போது அது கல்லீரலின் செயல்பாட்டைப் பாதித்து உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்குகிறது.
சிவப்பு இறைச்சி: சிவப்பு இறைச்சியில் நம் உடலுக்குத் தேவையான புரதங்கள் இருந்தாலும், இறைச்சி உணவுகளை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். மேலும், உடலில் அதிகப்படியான புரதம் குவிந்து கல்லீரல் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
நாம் உண்ணும் உணவைச் சேமித்து, செரிமானத்துக்கு உதவும் முக்கியமான உறுப்பு கல்லீரல். மேற்கூறிய உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
Discussion about this post