முதலமைச்சர் மீது மக்கள் வெறுப்பில் – ரூ.39 ஆயிரம் கோடி ஊழலுக்கு சான்றுகள் விரைவில் வெளியாகும்: நயினார் நாகேந்திரன் பேட்டி

0

முதலமைச்சர் மீது மக்கள் வெறுப்பில் – ரூ.39 ஆயிரம் கோடி ஊழலுக்கு சான்றுகள் விரைவில் வெளியாகும்: நயினார் நாகேந்திரன் பேட்டி

சென்னை, ஆழ்வார்பேட்டை:
தமிழக மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது வெறுப்பில் உள்ளனர் என பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“முதலமைச்சர் ரூ.39 ஆயிரம் கோடி ஊழல் நடைபெறவில்லை எனத் தெரிவித்திருக்கிறார். ஆனால் மத்திய அமைச்சர் இந்த அளவிற்கு ஊழல் நடைபெற்றதாகவே கூறியுள்ளார். இதற்கான ஆவணங்கள் விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்,” என தெரிவித்தார்.

மேலும்,

“நான்காண்டுகளாக நடைபெற்று வரும் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவே, பாஜக சிறப்பாக செயல்படும்,” என்றும் உறுதிபட கூறினார்.

விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்த அவர்,

“அவர் இப்போதுதான் புதிதாக கட்சியைத் தொடங்கியுள்ளார். மக்களின் மனநிலையைப் புரிந்த பிறகு பேசினால் நன்றாக இருக்கும். யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதைக் கிட்டத்தட்ட மக்கள் தான் வாக்களிப்பதன் மூலம் தீர்மானிக்கிறார்கள். அதை விஜய் தீர்மானிப்பது சரியல்ல,” என விமர்சித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here