WhatsApp Channel
நெதர்லாந்து அணி சார்பாக ஸ்காட் எட்வர்ட்ஸ் 78 ரன்கள் பெற்றார்.
இன்றைய உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகள் தர்மசாலாவில் விளையாடி வருகின்றன. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டதால் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்பின், நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய விக்ரம்ஜித் சிங் 2 ரன்களிலும், மேக்ஸ் ஓடவுட் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களம் இறங்கிய அக்கர்மென் 12 ரன்களும், பாஸ் டி லீட் 2 ரன்களும், ஏங்கல்பிரெக்ட் 19 ரன்களும், நிடமனுரு 20 ரன்களும், வான் பீக் 10 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
பின்னர் ஸ்காட் எட்வர்ட்ஸ் மற்றும் வான் டெர் மெர்வே அணியை சரிவில் இருந்து மீட்டனர். வான் டெர் மெர்வே 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய எட்வர்ட்ஸ் அசத்தலாக அரைசதம் அடித்தார்.
இறுதியில் நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் எட்வர்ட்ஸ் 78 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி விளையாட உள்ளது.
Discussion about this post