WhatsApp Channel
நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி உலக கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
இன்றைய உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகள் தர்மசாலாவில் மோதின. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டதால் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்பின், நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய விக்ரம்ஜித் சிங் 2 ரன்களிலும், மேக்ஸ் ஓடவுட் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களம் இறங்கிய அக்கர்மென் 12 ரன்களும், பாஸ் டி லீட் 2 ரன்களும், ஏங்கல்பிரெக்ட் 19 ரன்களும், நிடமனுரு 20 ரன்களும், வான் பீக் 10 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
பின்னர் ஸ்காட் எட்வர்ட்ஸ் மற்றும் வான் டெர் மெர்வே அணியை சரிவில் இருந்து மீட்டனர். வான் டெர் மெர்வே 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய எட்வர்ட்ஸ் அசத்தலாக அரைசதம் அடித்தார். இறுதியில் நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் எட்வர்ட்ஸ் 78 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி விளையாடியது. தென்னாபிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பௌமா 16 ரன்களும், டிக்காக் 20 ரன்களும், அடுத்து களம் இறங்கிய வென்டெர் டெசன் 4 ரன்களும், மார்க்ரம் 1 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின், தென் ஆப்பிரிக்கா 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதன் பிறகு, மில்லர் மற்றும் கிளாசன் அணியை சரிவில் இருந்து மீட்டனர். அணியின் ஸ்கோர் 89 ஆக உயர்ந்தபோது டை முறிந்தது.நிதானமாக பந்துவீசிய கிளாஸன் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். விரைவில் மில்லர் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் தென்னாப்பிரிக்காவின் கடைசி நம்பிக்கை முடிவுக்கு வந்தது.
இறுதியில் தென்னாப்பிரிக்கா 42.5 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நெதர்லாந்து அணி சார்பில் வான் பீக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது நெதர்லாந்து அணி.
Discussion about this post